அஜீத் உண்மையான சூப்பர் ஸ்டார் – அருண் விஜய்

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ajith-arunvijay

இதுவரை கதாநாயகனாக நடித்து வந்த அருண் விஜய் இப்படத்தில் முதன் முதலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜீத்துடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய், அஜீத் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கிறார்.

இதைப்பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில், அஜீத்தை பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் நெருங்கி பழகினது இல்லை. அவருடன் பழகியதில் அவர் ஒரு ரியல் சூப்பர் ஸ்டார். அவர் எதையும் போலியாக செய்ய மாட்டார். அவருடைய ஒவ்வொரு செயலையும் நான் நேசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஜீத், 3, 4 கெட்-அப்களில் நடித்து வருகிறார். படத்தின் டிரைலர்களையும், பாடல்களையும், படத்தின் பெயரையும் விரைவில் அறிவிக்க உள்ளனர். பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts