நடிகர் சந்தானம் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்த அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார்.
சூப்பர்ஸ்டாருடன் ஆன்மிகம் பத்தி பேசினா, நேரம் போறதே தெரியாது. மனசுக்குள்ள ரொம்ப நாளா சந்தேகமான விஷயங்களைப் பத்தி அவர்கிட்ட பேசுவேன். ‘இதுக்கு இதுதான் தீர்வு, உபாயம்’னு எந்தக் கேள்விக்கும் லாஜிக்கலா சரியான பதிலைச் சொல்வார்.
ஒரு தடவை, ‘அசைவம் சாப்பிட்டா தப்பு, மது குடிச்சா தப்புனு சொல்றாங்களே… உண்மையில் தப்புன்னா என்னண்ணே?’னு கேட்டேன்.
எதுவுமே வாழ்க்கையில் தப்பு இல்லை. நீ செஞ்சதை தப்பு பண்ணிட்டோமோனு நினைக்கிறீங்களா, அதுதான் உண்மையான தப்புனு சொன்னார்.
நினைக்கிறதெல்லாம் தப்பாதான் இருக்குன்னு சொன்னேன். அப்ப நீ தப்பா தான் நினைக்கிறீன்னு சொல்லி சிரிச்சார்.