வடமாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தற்போது அரசாங்கத்தினால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நேரத்தில் நெடுந்தீவுக்கான 100 சதவிகித மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது 40 சதவீதமான மின் வழங்கும் வேலைகள் பூர்த்தியாகிய நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கவுள்ள புதிய திட்டத்தின் கீழ் மீதி வேலைகள் பூர்த்தி செய்யப்படுமெனவும், இதன் மூலம் நெடுந்தீவில் 100 சதவீத மின்சாரம் கிடைக்கப்பெறுமெனவும் தெரிவித்துள்ளனர்.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தியமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்நிகழ்வில் பங்கு கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீவகத்திலுள்ள கிழக்கு ,மேல் ,மத்திய அனைத்து பிரதேசங்களிலும் வசிக்கும் சுமார் 1,082 குடும்பங்கள், இப்புதிய மின்சாரவேலைத்திட்டத்தின் மூலம் மின்சாரவசதி கிடைக்கப்பெறுவர். இதற்கென சுமார் 60 மில்லியன் ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.