கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் கதை. இதன் படப்பிடிப்புகள் வருகிற 10ந் தேதி முதல் தொடங்குகிறது என நம்பத் தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
படத்தில் துல்கர் சல்மான் ஹீரோ என்பது ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. ஹீரோயின் நித்யா மேனன் என்கிறார்கள். இதனை நித்யாவோ, மெட்ராஸ் டாக்கீசோ உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டரில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இதுகுறித்து பிரகாஷ் ராஜ் தனது பிளாக்கில் எழுதியுள்ளார். “மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கிறேன். அவர் சொன்ன கதையும், எனது கேரக்டரும் சூப்பாராக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். இப்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைகிறார்.