மாதவன் வேட்டை படத்துக்கு பிறகு தமிழில் எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
அவர் வடமொழி படங்களில் தான் அதிகம் நடிப்பார் என்று தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் கண்டுகொள்ளவில்லை .
இந்நிலையில் முன்று வருடங்களுக்கு முன்னதாக வெளிவந்த தனு வெட்ஸ் மனு திரைப்படம் மாதவனுக்கு ஹிந்தியில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
இப்படத்தை தனுஷை வைத்து ராஞ்சனா என்ற படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் முதல் படம் என்பது குறிப்பிட தக்கது.
மாதவனுக்கு ஹிந்தியிலும் மார்க்கெட் தற்போது டல் அடிக்க உடனே ஆனந்த் எல் ராய் கூப்பிட்டு ‘தனு வெட்ஸ் மனு சீஸன் 2’ தொடங்கலாம் என்று சொல்லி நேற்று படப்பிடிப்பை தொடங்கினார்.
இப்படம் மீண்டும் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார்