இ.போ.ச பஸ் மீது கல்வீச்சு

யாழ்- கொழும்பு பஸ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது, மீசாலை பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (07) இரவு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.

பற்றைக்குள் மறைந்திருந்தவர்களே இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இதில் பஸ்ஸின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பஸ்ஸிலிருந்த பயணிகள் பிறிதொரு பஸ்ஸொன்றில் ஏற்றி அனுப்பி வைத்ததுடன், தாக்குதலுக்குள்ளான பஸ் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts