Ad Widget

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி கட்டுமானம் துவக்கம்

இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கேனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி அமெரிக்க டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை கூட்டாக நிறுவும் பணிகளை ஹவாய் தீவில் இன்று செவ்வாய்க்கிழமை துவங்கியிருக்கின்றன.

120601064515_milkyway_andromeda_624x351_nasa_nocredit

ஹவாய் தீவில் இருக்கும் புகழ்பெற்ற மவுன கிய எரிமலைக்கு அருகில் நிறுவப்படும் இந்த தொலைநோக்கி தான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும். இதன் மூலம் 500 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மிகச்சிறிய நாணயத்தை மிகத்துல்லியமாக காட்டக்கூடிய அளவுக்கு இந்த தொலைநோக்கியின் திறன் இருக்கும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட தொலைநோக்கியானது, வானியல் விஞ்ஞான புரிதலை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றும் என்று கருதப்படுகிறது.

இன்று துவங்கும் இந்த மிகப்பிரம்மாண்ட தொலைநோக்கியின் கட்டுமானம் 2022 ஆம் ஆண்டு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானியல் விஞ்ஞானத்தின் முக்கிய மைல்கல்லாக இந்த தொலைநோக்கி முக்கிய பங்காற்றும் என்கிறார் சென்னையில் இருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான பெரியார் மையத்தின் துணை இயக்குநர் சவுந்திர ராஜ பெருமாள்.

Related Posts