அஜீத் நடிக்கும் கௌதம் இயக்கும் புதிய படத்தை பற்றி தினமும் ஏதாவது ஒரு புதிய செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை பற்றி குறிப்பிட்டு சொல்லும் காட்சிகளில் யாராவது ஒரு பிரபலம் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய கௌதம் மேனனுக்கு, முதலில் ஞாபகம் வந்தது கமல்தான்.
ஏற்கெனவே ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமலுடன் இணைந்து பணியாற்றியதில் திருப்தியடைந்த கௌதம் மேனன் இப்படத்தில் ஒரு சில காட்சிகளுக்கு பின்னணியில் கமலை வைத்து குரல் கொடுக்க முடிவு செய்துள்ளதால். இதற்காக விரைவில் அவரை அணுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜீத்தின் 55-வது படமாக உருவாகி வரும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கும் இப்படத்தின் தலைப்பையும், பாடலையும் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அடுத்த பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.