‘ஐ’ படம் கத்தியுடன் மோத விரும்பாமல் தற்போது மேலும் ஒருமாதம் தள்ளி வெளியாக திட்டமிட்டு வருகிறது.இதனால் ஷங்கர் மற்றும் விக்ரமின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். ‘ஐ’ படத்திற்காக இரண்டு வருடங்கள் உழைத்த விக்ரம் அது தீபாவளிக்கு எப்படியும் வெளியாகிவிடும் என்று பெரிதும் ஆவலுடன் காத்திருக்கிறாராம்.
தற்போது நிலமையை உணர்ந்து கொண்ட விக்ரம் அடுத்து விஜய் மில்டன் இயக்கி வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.
சமீபத்திய தகவலின் படி இப்படத்தின் 85 சதவீத படப்பிடிப்பும் முடிந்து விட்டதாம். இப்படம், ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் விக்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சமந்தா. இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் பசுபதி நடிக்கிறார்.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கிறார்கள். ‘ஐ’ படத்தின் ரிலீஸை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படமும் ரிலீஸாகவிருப்பதால் விக்ரம் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
இரண்டாவது படம் முடிந்ததும் தனது அடுத்தப்படம் இயக்குநர் ஹரியுடன் என்று முடிவு செய்திருக்கிறாராம். இது சாமி படத்தின் இரண்டாம் பாகம் என்று நம்பகமான தகவல் கிடைக்கிறது.