இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இத்தாலி வாழ் இலங்கை மக்களை சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புனித பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அழைக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த இத்தாலிக்கு விஜயம் செய்துள்ளார்.
சில நாடுகள் இலங்கையில் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்ய ஊக்கமளிப்பதே இந்த நாடுகளின் நோக்கமாக அமைந்துள்ளது.
உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கை மக்கள் நாட்டுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது ஆட்சிக் காலத்திலேயே அதிகளவு தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நாடு எவ்வளவு ஜனநாயகத்தை உடையது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.