ஐ டீசர் குறித்து பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்!

ஐ டீசர் சமீபத்தில் வெளிவந்து 70 லட்சம் ஹிட்ஸை தாண்டி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த டீசர் வெளிவந்த போது பல திரைப்பிரபலங்கள் விக்ரம் மற்றும் ஷங்கரை வாழ்த்தி தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தனர்.

shankar

இதுநாள் வரை ஐ படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருந்த ஷங்கர், தற்போது அவர்களுக்கு தன்னுடைய சமூக வலைத்தளங்களில் நன்றியை தெரிவித்துள்ளார்.

இதில் ” ‘ஐ’ டீஸரை குறிப்பிட்டு பாராட்டிய இயக்குநர் ராஜமெளலி, தனுஷ், சிவகார்த்திகேயன், சித்தார்த், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், செளந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

Related Posts