அக்டோபர் 5ஆம் திகதி கொண்டாடப்படவிருந்த புனித ஹஜ்ஜுப்பெருநாளுக்காக வழங்கப்படும் அரசாங்க விடுமுறை தினத்தை அக்.6ஆம் திகதிக்கு வழங்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 6ஆம் திகதி அரசாங்க பொது, விஷேட வங்கி விடுமுறை தினமாகும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற பிறைக்குழு கூட்டத்தின் போது நாட்டின் எப்பாகத்திலும் துல்-ஹஜ் பிறை தென்படாததால் அக்டோபர் 6ஆம் திகதியே ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்படும் என தீர்மானிக்கப்பட்டதையடுத்தே அரசாங்கம் அக் 6ஆம் திகதியை அரச விடுமுறை தினமாக பிரகனடப்படுத்தியதாக அமைச்சின் ஊடகச்செயலாளர் தம்மிக திலகரத்ன தெரிவித்தார்.