ஜீவாவுக்குக் கை கொடுக்குமா ‘யான்’!

ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாவது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான். அப்படி இயக்குனராக மாறியுள்ளவர்களில் ஒருவர் ரவி கே. சந்திரன். பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் ‘யான்’. ஜீவா, துளசி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இன்னும் இரண்டு நாட்களில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

Jeeva-Yaan-songs

2003ல் ‘ஆசை ஆசையாய்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான ஜீவாவுக்கு அமீர் இயக்கத்தில் வெளிவந்த ‘ராம்’ படம்தான் சரியான அடையாளத்தைக் கொடுத்தது. அந்தப் படம் அவருக்கு நடிகராக நல்ல திருப்புமுனையைக் கொடுத்தது. அதன் பின் வெளிவந்த ‘ஈ, கற்றது தமிழ்’ ஆகிய படங்கள் அவரது நடிப்புத் திறமையை நிரூபித்தாலும், கமர்ஷில் வெற்றியாக ‘சிவா மனசுல சக்தி, கோ’ ஆகிய படங்கள் மட்டும்தான் பெற்றுத் தந்தது.

‘நண்பன், என்றென்றும் புன்னகை’ படங்களில் மூன்று ஹீரோக்களில் ஒரு ஹீரோவாகத்தான் நடித்திருந்தார். தனிப்பட்ட ஹீரோவாக ‘கோ’ படத்திற்குப் பிறகு அவர் பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன.

அதனால் ஜீவா தற்போது ‘யான்’ படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அதில் ஒரு சென்டிமென்ட்டும் அடங்கியுள்ளது. ‘கோ’ படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.

அதே போல ‘யான்’ படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள ரவி கே.சந்திரன் இயக்கியுள்ளார். இரண்டுமே ஒரு வார்த்தைப் படங்கள். அதனால் ‘கோ’ வெற்றி ‘யான்’ படத்திலும் கிடைக்கும் என்று யாவருமே நம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

Related Posts