போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரிப்பு!

நாட்டில் போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் அதிகளவான போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் இதுவரையில் 1176 போலி ஐயாயிரம் ரூபா நாணயத் தாள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த அண்டில் 311 போலி ஐயாயிரம் ரூபா நாணயத் தாள்களே மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் 562 போலி இரண்டாயிரம் ரூபா தாள்களும், 1622 போலி ஆயிரம் ரூபா தாள்களும், 1184 போலி ,ஐநூறு ரூபா தாள்களும், 42 போலி நூறு ரூபா தாள்களும், 6 ஐம்பது ரூபா போலி தாள்களும், 1 போலி 20 ரூபா தாள்களும் மீட்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதிகளவில் இவ்வாறான போலி நாணயத்தாள் அச்சிடப்படுவதாகத்
தெரிவிக்கப்படுகிறது.

அதிக சனநெரிசல் மிக்க இடங்களில் பணக் கொடுக்கல் வாங்கல்களின் போது மக்கள் விழிப்புடன் செயற்பட
வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட வகையில் சில குழுக்கள் நாடு முழுவதிலும் போலி நாணயத்தாள் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாக
பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts