கத்தி படத்துக்காக, அனிருத் இசையமைப்பில் விஜய், சுனிதி சௌகான் பாடிய ‘செல்ஃபி புள்ள…’ பாடலின் ஒலிப்பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது.
இப்பாடலை லண்டனுக்குச் சென்று படம் பிடிக்கப் போவதாக முதலில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், படப்பிடிப்பு குழுவினருக்கு லண்டன் செல்வதற்காக விசா வாங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் லண்டன் செல்லும் முடிவை கைவிட்டனர்.
செல்ஃபி புள்ள… பாடலை வேறு எங்கு படமாக்குவது என்று நடைபெற்ற பரிசீலனையில் ஹைதராபாத்தில் செட் போட்டு பாடலை எடுக்க முடிவு செய்தனர். பின்னர் அந்த முடிவையும் மாற்றிக்கொண்டு, மும்பையில் 2.5 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைத்து படமாக்க முடிவெடுத்தனர்.
அதன்படி மும்பையில் உள்ள ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு கடந்த சில தினங்களாக பாடல்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.விருக்கிறார்கள்.
இந்த பாடல்காட்சியில் விஜய், சமந்தா உடன் சுமார் 50 நடனக் கலைஞர்கள் பங்குபெற்று வருகிறார்கள். செல்ஃபி புள்ள பாடல் காட்சி படமாக்கப்பட்ட பிறகு பேட்ச் ஒர்க் என்கிற விடுபட்ட ஷாட்களை எடுக்கும் பணி ஒரு நாள் நடைபெறுகிறது. அதோடு கத்தி படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது.
இதற்கிடையில் தற்போது எடுக்கப்பட்டு வரும் செல்ஃபி புள்ள பாடல் காட்சி பற்றி ஒரு தகவல் கசிகிறது… இந்தப் பாடல் காட்சியில் ஒரு ஷாட்டில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், இசையமைப்பாளர் அனிருத்தும் தோன்றுகிறார்களாம்.!