ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கில் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், அங்கு வருகை தந்திருந்த பலஸ்தீன் நாட்டு ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை சந்தித்து கலந்துரையாடினர்.
பலஸ்தீனுக்கு வழங்குவதாக ஜனாதிபதியினால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை, இந்த சந்திப்பின் போது பலஸ்தீன் ஜனாதிபதியிடம் இலங்கை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளித்தார்.