வட மாகாண சபையில் 16வது அர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரும் வட மாகாண சபையின் உறுப்பினர் அங்கஜன் இரமநாதனால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்த அனுமதி அளித்த வட மாகாண சபைக்கும் கல்வி அமைச்சர் த. குருகுரவாஜா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். என அங்கஜன் அவர்களால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் …
வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் முன் வைக்கப்பட்ட பிரேரணையான வட மாகாணப் பாடசாலைகளில் கடந்த பல ஆண்டுகளாக ஓப்பந்த அடிப்படையில் அமைய அடிப்படையில் அலுவலகப்பணியாளர்களாக நூலகர்களாக காவலாளிகளாக சுகாதரப்பணிப்பாளர்களாக கடமை புரிபவர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுக்க வேண்டுமென வடக்கு மாகாண கல்வி அமைச்சரை கோரியிருந்தார்.
ஆதற்கு அமைய வட மாகாண கல்வி அமைச்சர் குறித்த பிரேரணை தொடர்பின் விளக்கம் அளிக்கும் போது, தாம் குறித்த பிரேரணை தொடர்பில் விளங்கி கொண்டதாகவும் வட மாகாணத்தில் தற்போது பாடசாலைகளில் நிலவுகின்ற வெற்றிடங்களை ஏற்கனவே ஓப்பந்த அடிப்படையில் கடமை புரிந்து வரும் பணியாளர்களை நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் வரியக்கூட்டத்தில் குறித்த பிரேரணையை வரியப் பத்திரமாக சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரும் வட மாகாண சபையின உறுப்பினருமாகிய அங்கஜன் இராமநாதன் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.