2014 காலநிலை உச்சிமாநாட்டில் ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் கருத்துக்கள்

நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற காலநிலை உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வழங்கிய கருத்துக்களின் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.

President_at_the_Climate_Summit_2014_2

2014மதிப்புக்குரியவர்களே,

பூகோள சுற்றுச்சூழலின் நிலை தற்போது அதிக கவனமெடுக்கப்பட வேண்டியதாக உள்ளது. காலநிலை மாற்றத்தால் முன்வைக்கப்படும் ஆபத்து என்பது நடப்பு அவசர நிலையாகும். எங்களது சவால் பொதுவானதென்பதோடு, அது இணைந்ததாகவும், பல் பரிமாணங்களிலும் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

பூகோளத் தூண்டல்களை எதிர்கொள்வதற்கான அரசாங்கக்கிடையிலான பிரதான மன்றமாக காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் திட்டவரைபு மாநாடு (UN Framework Convention on Climate Change – UNFCCC) காணப்படுகிறது. தீர்வுகளைத் தேடுவதற்கான எங்கள் தேடல்களை நேர்மை மற்றும் பொதுவான தன்மை – ஆனால் வித்தியாசப்படுத்தப்பட்ட பொறுப்புக்களும், குறிப்பிட்டளவு திறன்களுமான கொள்கைகள் வழிப்படுத்த வேண்டும். பச்சைய வீட்டு வாயுக்களின் (GHG) வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தூய்மையான அபிவிருத்திப் பொறிமுறை (Clean Development Mechanism) தவிர்க்கமுடியாததாகும். நிதி உதவிகள், தொழிநுட்ப அபிவிருத்தி மற்றும் பரிமாற்றம், திறன் உருவாக்கத் ஆகியவற்றை அபிவிருத்தியடைந்து வருவனவற்றிற்கு வழங்குவதனூடாக அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்கள் அர்ப்பணிப்பை அமுல்படுத்தவேண்டும். உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய ரீதியிலான உறுதியான பங்களிப்புக்களுக்கான உள்ளூர் தயார்படுத்தல்களை மாநாட்டின் அனைத்துத் தரப்பினரும் விரைவுபடுத்த வேண்டும்.

President_at_the_Climate_Summit_2014_3

1993 இல் UNFCCC இனை இலங்கை ஏற்றுக்கொண்டதோடு, 2002 இல் கியோட்டோ நடைமுறைக்கு (Kyoto Protocol) இணங்கியது.

பூமியும், அதன் தாவரங்களும் ஆள்பவர்களுக்குச் சொந்தமானவையல்ல என்பதோடு, எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டிய தற்காலிய அறங்காவலர்கள் மாத்திரமே அவர்கள் என்று கௌதம புத்தரின் சீடரான அரஹாத் மஹிந்தவினால் போதிக்கப்பட்ட கௌதம புத்தரின் தத்துவத்திலிருந்து இலங்கைத் தலைவர்கள் உந்துசக்தியைப் பெற்றுக்கொண்டுவந்தார்கள்.

காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்தின் திட்ட நிகழ்ச்சித்திட்டமான மஹிந்த சிந்தனையானது காட்டுப் பரம்பலை அதிகரித்தல், கடலோரத்தைப் பாதுகாப்பதற்காக முகத்துவாரங்கள், கடலேரிகள், கண்டல்கள், உவர் சதுப்பு நிலங்கள், மணற்குன்றுகள், கடற்கரைகள், புற்படுக்கைகள் ஆகியவற்றினைப் புனரமைத்தலும், மீளக்கொண்டுதலும், பசுமைப் போக்குவரத்து அமைப்பு மற்றும் எரிபொருள் தரமான வீதி வரைபடத்தினையும், நீர் கிடைக்கப்பெறலையும், அதனைத் தக்கவைத்துக் கொள்வதையும் அதிகரிப்பதற்காக பல்-வள ஓடைவடிகால் முகாமைத்துவத்தையும் அமுல்படுத்துதல் ஆகிய உபாயங்களை உள்ளக்கியுள்ளது.

கடந்த எட்டு வருடங்களில் தனது தனிநபர் வருமானத்தை இலங்கை மூன்று மடங்காக்கியுள்ள போதிலும், அதன் தனிநபர் காபன் வெளியேற்றம் இன்னமும் ஒரு மெட்ரிக் தொன்னிற்குக் குறைவானதாகவே காணப்படுகிறது.

காலநிலை மாற்றம், இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றிற்கான சிறிய நாடுகளின் மீளும் தன்மையை ஒருங்கிணைப்பதற்கும், காலநிலை நிதிக்கான புத்தாக்கக் கருத்துரைகளை விருத்திசெய்வதிலும் தற்போது இலங்கையால் தலைமைவகிக்கப்படும் பொதுநலவாயம் குறிப்பான கவனத்தைச் செலுத்தியுள்ளது. அபிவிருத்தியடைந்துவரும் சிறிய தீவுத் தேசங்கள் (SIDS), குறைவான அபிவிருத்தியடைந்த நாடுகள் (LDCs) ஆகியனவற்றிற்கு காலநிலை நிதிகளின் அணுக்கத்திற்கான இலகுவாக்கப்பட்ட ஏற்பாடுகளின் சாத்தியத்தன்மை குறித்து ஆராயப்பட்டுவருகின்றது. தற்போது காணப்படும் நிதிகளுக்கு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அணுக்கத்திற்கான முன்னேற்றப்பட்ட வாய்ப்புக்களுக்கு பொதுநலவாயம் கோருகிறது.

Related Posts