அஜீத் போலீஸ் உடையில் நடித்த ‘ஆஞ்சநேயா’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் ஒரு சில படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளன. இதுவரை 4 படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்துள்ள அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்திலும் போலீஸ் உடையில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கௌதம் மேனன் இயக்கும் படத்தில் துப்பறியும் காட்சிகளில் வரும் அஜீத், போலீஸ் உடையணிந்து நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து, மிகவும் அழகான தோற்றத்துடன் வலம் வருகிறாராம்.
அஜீத்தின் 55-வது படமாக உருவாகிவரும் இப்படத்தில் திரிஷா, அனுஷ்கா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக ஆடியோ வெளியீடை நடத்த முடிவு செய்துள்ளனர்.