இந்திய மீனவர்களின் மீன்களை விற்று இழப்பீடு வழங்க கோரிக்கை

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்படும் இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் மீன்களை விற்பனை செய்து, இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் இழப்புக்களை ஈடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

dak-thevananthaaa

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும்போது அவர்களது கைவசம் இருக்கும் மீன்கள் காலவரையறையின்றி வைத்திருக்க வேண்டியிருப்பதால் அவை பழுதடைந்து வருகின்றன.

ஆகவே, அம்மீன்களை நீதிமன்ற உத்தரவுடன் உடனடியாகவே சந்தைப்படுத்தி அதிலிருந்து பெறும் நிதியை பாதிக்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றே அமைச்சர் தேவானந்தா கோரியுள்ளார்.

ஏற்கனவே, இலங்கை கடற்றொழிலாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து கடந்தவாரமும் அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts