சாவகச்சேரி, சப்பச்சிமாவடி பிள்ளையார்கோயில் வீதிக்கு நிரந்தர ரயில் கடவை அமைத்து தரும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த வீதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ரயில்வே கடவையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை எதிர்த்த அப்பகுதி மக்கள், அந்த வீதிக்கு நிரந்தர பாதுபாப்பு ரயில் கடவை அமைத்து தர கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களாக மக்கள் தமது எதிர்பபைத் தெரிவித்துவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன்போத அவ்வாழியாகத் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்த உள்ளிட்ட குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது, குறித்த வீதிக்கு பாதுகாப்பு ரயில் கடவை அமைப்பது தொடர்பில் ரயில்வே திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
அதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். குறித்த வீதியை தினமும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்திவருகின்றனர். குறிப்பாக பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலைக்கு வருவோர் என்று பலர் தினமும் பயன்படுத்துவதால் அந்த வீதிக்கு ரயில்வே கடவை தேவை என்று மக்கள் வலியுறுத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.