யாழ்.தேவியை பார்க்க சென்ற சிறுமியை பாம்பு தீண்டியது

யாழ்.தேவி புகையிரதத்தை பார்ப்பதற்காக வயல் வரம்பின் வழியே ஓடிச்சென்ற சிறுமியை பாம்பு தீண்டியதில் சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (21) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுணாவில் மேற்கை சேர்ந்த மகிந்தன் பதுமிகா (வயது 07) என்ற சிறுமியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோர்களுடன் வயலில் நின்றிருந்த சிறுமி யாழ்.தேவி புகையிரதம் வெள்ளோட்டமாக யாழ்ப்பாணம் செல்கின்றமையை வேடிக்கை பார்ப்பதற்காக வயல் வரம்பு வழியாக புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் செல்ல முற்பட்டார்.

இதன்போது, வயல் வரம்பில் கிடந்த புடையன் பாம்பு சிறுமியை தீண்டியுள்ளது.

Related Posts