தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பண்டாரவளை மேயர் ஷமிந்த விஜேசிறி( ஐக்கிய தேசியக்கட்சி) தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரவளை வடக்கு கெபில்லவெல எனுமிடத்தில் வைத்தே தன்மீது பிரதியமைச்சர்கள் இருவர் தாக்குதல் நடத்தியதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த மேயர் பதுளை வைத்தியசாலையில், அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேயர் பொலிஸ் நிலையத்தில் வைத்தே, அரசாங்கத்தரப்பு பிரதிநிதிகளினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.