ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது.
834 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு போனஸ் ஆசனங்கள் உள்ளிட்ட 34 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக மொத்தமாக 617 வேட்பாளர்கள் பல்வேறு கட்சிகள், சுயாதீனக் குழுக்களின் சார்பில் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை, காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மக்களிடம் கோரியுள்ளார்.
விருப்பமானவாறு சுதந்திரமாகவும் இரகசியமாகவும் வாக்களிப்பதற்கு வாக்காளர்களுக்கு பூரண உரிமை இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களின் வாக்குரிமைக்கு இடையூறு ஏற்படுத்த எவருக்கும் அதிகாரம் கிடையாது. ஆள் அடையாளத்தை உறுதி செய்யாத எவருக்கும் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக 12,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊவா மாகணத்திற்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.