சாவகச்சேரி தெற்கு பிரதேச வயல்களிற்கு குப்பை ஏற்றிச்செல்லும் உழவு இயந்திரங்களை பொலிசார் வழி மறித்து வைத்திருப்பதாக நெற் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசாரிடம் வினாவிய போது குப்பைகளை வாகனங்களில் ஏற்றி அதனை திறந்த நிலையில் கொண்டு செல்லும் போது அவை காற்றில் பறப்பதனால் சூழல் மசடைவதுடன் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்ப்படுகின்றது. அதனால் அவ்வாறான வாகனங்களை தடுத்து நிறுத்தி மூடிய பின்னர் கொண்டு செல்ல அனுமதிக்கின்றோம்.
மேலும் உழவு இயந்திரங்களில் கொண்டு செல்லப்படும் கலப்பைகள் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்படுவதால் கலப்பையின் இரு கரைகளிலும் காணப்படும் இரும்பு கேடர்களினால் வீதியில் செல்லும் மக்களிற்கும் வாகனங்களிற்கும் பாதிப்பு ஏற்ப்படாதிருக்கவே கலப்பையை பெட்டியில் ஏற்றி செல்லுமாறு தாம் அறிவுறுத்துவதாகவும். பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்டுள்ள கலப்பைகளை உழவு இயந்திரத்தில் பொருத்திக்கொண்டு செல்ல அனுமதிப்பதாகவும் தெரிவித்தனர்.