யாழ்.மாவட்ட முன்னணியிலுள்ள மூன்று பிரபல ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்களின் மலத்தொற்று காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
நெருப்புக் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய கோலி போர்ம் என்ற பக்ரீறியா ஐஸ்கிறீம் வகைகளில் அளவுக்கு அதிகமாகவே இருப்பது ஆய்வுகூடச் சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பானத்தில் அதிகரித்துவரும் நெருப்புக் காய்ச்சல் நோய்க்கு இது ஒரு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் குறித்த நிறுவனங்களின் தயாரிப்புக்களை தடை செய்யவோ உற்பத்தியை நிறுத்தவோ இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவருகிறது.
ஐஸ்கிறீம் உற்பத்திகளில் மலத்தொற்று கண்டறியப்பட்டுள்ளமையை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.