எனது உடல் நிலையை வைத்து நாடகமாட நினைத்தவர்களை ஏமாற்றியதற்காக நான் வருந்துகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் உணவு ஒவ்வாமை (ஃபுட் பாய்சன்) காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக அவருக்கு நரம்பு பிரச்சினை என்று தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து தொலைபேசி மூலம் பேசிய கமல்ஹாசன், எனக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் இருக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை.
மேலும், இந்தச் செய்தியை வைத்து பெரிய நாடகம் நடத்த நினைத்தவர்களை ஏமாற்றியதற்காக வருந்துகிறேன் என கூறியுள்ளார்.