கல்வித் தகைமை மட்டும் போதாது நற்பண்பு இல்லை என்றால் எந்த உச்சம் போனாலும் உலகம் மதிக்காது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.
இன்று வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் இடம்பெற்ற சிறந்த பெறுபேறுகள் எடுத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வின் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்வி நிலமையிலுள்ள முக்கியமான பிரச்சினை தனியார் வகுப்புக்கள ஏனெனில் மாணவர்களுடைய பிரித்தறியும் அறிவும், தேடிக் கற்றல் அறிவும் கெட்டுப் போவதற்கு காரணம் தனியார் வகுப்புக்கள் தான்.
மேலும் இணையப்பாவனையும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துச் செல்வதனால் கல்வி அறிவு குன்றிப் போய் விடுகின்றது.
இணையத்தில் வெளிவரும் விஞ்ஞானம் சார்ந்த விடயங்கள் அனைத்தும் பிழையானவை என்பதை நான்
சுட்டிக்காட்டுவதுடன் கல்வித்தகைமையில் மட்டுமல்ல நற்பண்பிலும் சமூகத்தில் நற்பிரஜையாக மாணவர்கள் திகழ
வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.