பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க இராணுவம் முயற்சி! எதிர்த்த மக்கள் பொலிஸாரால் விரட்டியடிப்பு

புதுக்குடியிருப்பு நகர மத்தியில் அமைந்துள்ள தனியார் காணிகளை இராணுவத்துக்காக சுவீகரிக்க நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அப்பகுதியிலுள்ள காணிகளை அளவிட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திரண்ட மக்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு நகர மத்தியில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளும், புதுப்பிலவு சங்கத்துக்கு சொந்தமான காணிகளையும் சுவீகரிக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த காணிகளை இன்று நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அளப்பதற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அந்தக் காணிகளுக்கு சொந்தக்காரர்களும், பொதுமக்களும் திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் அங்குவந்த பொலிஸார் விரட்டியடித்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Posts