சீன ஜனாதிபதி, இலங்கையை வந்தடைந்தார்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், எயார் சைனா என்ற விசேட விமானத்தில் மூலமாக கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை முற்பகல் 11.53க்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு சென்று அவரை வரவேற்றார்.

jappann

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த அவர், 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார்.

தனது பாரியாருடன் வருகைதந்த அவரை, விமான நிலையத்தில் விரிக்கப்பட்டிருந்த செங்கம்பளத்துக்கு இரு பக்கங்களிலும் நடனக்கலைஞர்கள் நடமாட, பாடசாலை மாணவர்கள் சீன,இலங்கை ஆகிய இருநாடுகளின் தேசிய கொடிகளையும் அசைத்து வரவேற்றனர்.

விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வீதியின் ஒரு பக்கத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவரை வரவேற்கும் முகமாக விமான நிலையத்தை சுற்றி இருநாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுநாயக்க- கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் கொழும்பில் அவர், பயணிக்கும் இடங்களிலும் இருநாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

Related Posts