கடவுச்சீட்டுகளை பெற அடுத்த மாதம் முதல் கைவிரல் அடையாளம் அவசியம்!

புதிதாக கடவுச்சீட்டுகளை பெற விண்ணப்பம் செய்யும் இலங்கையர்கள் தமது உயிரியல் தகவல்கள் அல்லது கைவிரல் அடையாளங்களை வழங்கும் முறையை அமுல்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Sri-Lanka-Immigration-and-Emigration-visa

அமைச்சரவைக்கு ஜனாதிபதி தாக்கல் செய்த யோசனை ஒன்றுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கைவிரல் அடையாளங்களை பெற்று கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டுகளுக்கான உரிய தரத்துடன் கூடிய புகைப்படங்களை எடுப்பதற்கான ஸ்டுடியோக்கள் பயன்படுத்த மென்பொருள் வழங்கப்பட உள்ளது.

கடவுச்சீட்டுகளை பெற விண்ணப்பித்தவர்களின் கைவிரல் அடையாளங்களை பெற அவர்கள் குடிவரவு திணைக்கள அலுவலகத்திற்கு அழைக்கப்பட உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடனேயே இந்த திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts