கண்ணாடிகள் பொருத்தப்பட்ட ஓட்டோக்கள் தொடர்பில் அவதானாம் தேவை – பொலிஸார்

பயணிகளின் அந்தரங்க உறுப்புக்கள்,உள்ளாடைகளைப் பார்வையிடுவதற்காகச் சிலஓட்டோக்களில் மேலதிக கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.அவற்றினை அவதானித்துச் செயற்படுமாறு ஓட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

auto2

யாழ்.நகர் மாத்திரமின்றிச் சகல இடங்களிலும் உள்ள அதிகமான ஓட்டோக்களில் இத்தகைய கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.அது ஏன் பொருத்தப்பட்டுள்ளன.என்பது தெரியாமலேயே பலர் அதில் பயணிக்கின்றனர். ஆனால் ஓட்டோக்களில் பயணிக்கும் பெண்களையும்,அவர்கள் அணிந்திருக்கும் உள்ளாடைகளையும் பார்ப்பதற்காகவே அவ்வாறு கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஓட்டோக்களில் பின்னால் வரும் வாகனத்தை பார்ப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் பக்கக் கண்ணாடிகளின்
கீழாக இந்தக் கண்ணாடி ஒரு பக்கம் மாத்திரம் அல்லது இரண்டு பக்கமும் பொருத்தப்பட்டிருக்கும்.ஆனால் இந்தக்
கண்ணாடிகள் சாரதிகள் பின்னால் வரும் வாகனங்களை பார்ப்பதற்காகவே என்று அதில் பயணிக்கும் பயணிகள்
கருதக்கூடும்.ஆனால் அது ஏன் என்று பலருக்கு தெரியாது.

எனவே இனிமேல் அவ்வாறான கண்ணாடிகள் பொருத்தப்பட்ட ஓட்டோக்கள் தொடர்பில் பயணிகள் அவதானமாக
இருக்குமாறும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts