யாழ்.மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர், யுவதிகளை பிரதேச செயலகங்களில் பதிவுசெய்யுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அருமைநாயகம் அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளது.
எனவே வேலையற்றவர்களைப் பதிவுசெய்து வேலை வாய்ப்புகளைத் தேடுகின்ற இளைஞர், யுவதிகள் தாம் வசிக்கின்ற பிரதேச செயலகங்களில் மனிதவள உத்தியோகத்தர்களிடம் இந்த மாத இறுதிக்குள் பதிவுசெய்யவேண்டும்.
முன்னர் பதிவுசெய்து இதுவரை வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளாதவர்களும் தமது பதிவுகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.