யாழ்.பல்கலையின் விரிவுரைகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களிலும், முதலாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் திங்கட்கிழமை (15) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பீடாதிபதிகள் கூறினார்கள்.

விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கும் கலைப்பீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு கடுமையான டெங்கு தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, கலைப்பீடத்தின் முதலாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களின் விரிவுரைகள் திங்கட்கிழமை (15) முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக கலைப் பீடாதிபதி ஞாயிற்றுக்கிழமை (14) அறிவித்தார்.

இந்நிலையில், விடுதிகளில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த முதலாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களே தங்கியிருப்பதால், அனைத்து பீடங்களிலுள்ள முதலாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களின் விரிவுரைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பீடாதிபதிகள் அறிவித்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆனந்த குமாரசுவாமி மற்றும் பாலசிங்கம் விடுதிகளும் மூடப்பட்டு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts