இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதம்பேர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஹிந்தி மொழி பயன்பாட்டை இந்தியாவில் பரப்பும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி கடைபிடிக்கப்படும் ஹிந்தி திவாஸ் என்கிற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.