கத்தி படத்தின் பிரச்சனை எப்போது தான் முடிவுக்கு வரும் என அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் இதற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சுபாஷ்கரணே மனம் திறந்துள்ளார்.
இதில் ‘1989ம் ஆண்டே நான் இலங்கையை விட்டு வெளியேறி விட்டேன், தற்போது ஐரோப்பிய நாடுகளில் தான் வசித்து வருகிறேன். கத்தி படத்தை ஐரோப்பிய நாடுகளில் எதிர்க்கவில்லை, தமிழ்நாட்டில் தான் எதிர்க்கிறார்கள்.
என் வாழ்நாளில் நான் ராஜபக்சேவை சந்தித்ததே இல்லை, நானும் தமிழன் தான், மேலும் சூர்யா, சீமானை வைத்து எந்த படத்தையும் நான் தயாரிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.