பாப்பரசர் பிரான்சிஸ், இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வருகை தருவார் என்று இலங்கையில் கத்தோலிக்க திருச்சபை இன்று வெள்ளிக்கிமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அத்துடன் உத்தியோகபூர்வமான இலட்சினையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
கொழும்பு ஆயர் இல்லத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.