Ad Widget

பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலை பயன்படுத்தவும் – சி.வி.கே.சிவஞானம்

வடமாகாண சபை உறுப்பினர், தங்கள் பிரேரணைகள், கருத்துக்கள் தொடர்பில் மின்னஞ்சல் அனுப்பும் போது, உறுப்பினரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் மின்னஞ்சலை அனுப்புமாறு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் இன்று புதன்கிழமை (10) இடம்பெற்று வருகின்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”சிவாஜிலிங்கத்தின் திருத்திய பிரேரணை, சிவாஜிலிங்கத்தின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பப்படாமல் பிரிதொரு நபரின் மின்னஞ்சலில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது” என்றார்.

”உறுப்பினர்கள் தங்களின் பெயர்களில் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிகளின் ஊடாகவே பிரேரணைகள், கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

மின்னஞ்சல் முகவரிகளை மாற்றம் செய்தால் அது தொடர்பில் சபைக்கு அறிவிக்க வேண்டும்” எனவும் சிவஞானம் மேலும் கேட்டுக்கொண்டார்.

Related Posts