நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை(10) முக்கிய சட்டமூலம் ஒன்று சமர்பிக்கப்படவுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலமே இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
திருத்தியமைக்கப்பட்ட குறித்த சட்டமூலத்துக்கு, ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி புதன்கிழமை அமைச்சரவை அங்கிகாரம் வழக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.