Ad Widget

இராக்குக்கு ஆயுதங்களை வழங்குகிறது பிரிட்டன்

இராக் இராணுவத்துக்கு ஆயுதங்களை அளிப்பது குறித்த தகவல்களை பிரிட்டன் வெளியிட்டுள்ளது.

140629110202_iraq_army_304x171_reuters_nocredit

இஸ்லாமிக் ஸ்டேட் என்ற பெயரில் செயல்படும் சன்னி தீவிரவாதக் குழுவை எதிர்கொள்வதற்காக இராக்கிய இராணுவத்துக்கு 25 லட்சம் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளன.

கனரக இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் அதற்கான தோட்டாக்கள் வழங்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் மைக்கேல் பாலான் தெரிவித்துள்ளார்.

குர்து படைகளுக்கும் பிரிட்டன் உதவி செய்வதாக அவர் தெரிவித்தார். இராக் இராணுவத்துக்கு கொடுக்கப்படும் ஆயுத உதவிகள் புதன்கிழமையன்று அந்நாட்டுக்குப் போய்ச் சேரும்.

ஏற்கனவே இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டன் மனித நேய உதவிகளை செய்து வருகிறது. அமெரிக்கா இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளின் முக்கிய இலக்குகளை வான் மூலம் தாக்கி வருகிறது.

Related Posts