மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து, தாமே வாதிடப் போவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அறிவித்துள்ளார்.
18வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தமது கருத்துப்படி மகிந்த ராஜபக்ச மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராவார். நாட்டின் பொதுமகன் என்ற அடிப்படையில் இந்த மனுவை பொதுநலன் மனுவாக கருதி தாக்கல் செய்யவுள்ளது.
இதேவேளை இந்த விடயத்தில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை கோருவதற்கு ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.