கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றது.இதன் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மூன்று லட்சம் மாணவர்கள் இந்தப் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இந்த மாத இறுதியில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டில் சர்வதேச சிறுவர் தினமன்று பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டது. இவ்வாறு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.