சிறுவன் சடலமாக மீட்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை தமிழ்மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அமைந்துள்ள கொத்மலை நீர்த்தேக்க திட்டத்தில் சிறுவன் ஒருவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

thalavakkalai

தலவாக்கலை மட்டுக்கலையைச் சேர்ந்த சிறுவனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் தலவாக்கலை சென்.பற்றிக் பாடசாலையில், இம்முறை க.பொ.த சாதாரண தரத்தில் கல்விப்பயிலும் 16 வயதுடைய லோகநாதன் சிறிவதனன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளான்.

இதனையடுத்து சிறுவனை காணவில்லையென பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டும் பொலிஸாரின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டன்- தலவாக்கலை பிரதான வீதி போக்குவரத்து பாதையை இடைமறித்து பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts