Ad Widget

விஜய்க்கு சிலை

மதுரை, பாண்டிய வேளாளர் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ஒரு சிற்பக் கலைஞர். இவரது மகன்கள் நாகராஜன் (வயது 27) மற்றும் சுப்புரு (வயத 23) 6ஆம் வகுப்பு வரை படித்த சுப்புரு, அதன்பிறகு தனது தந்தைக்கு உதவியாக சிற்பத் தொழிலில் ஈடுபட்டார்.

vijay-statue-in-madurai

சிறு வயதில் இருந்தே நடிகர் விஜயின் தீவிர இரசிகரான சுப்புரு, விஜய் நடித்த திரைப்படம் வெளியாகும் தினத்தன்றே அந்த திரைப்படத்தை பார்த்து விடுவது வழக்கம். விஜய் மீது கொண்ட தீவிர பற்று காரணமாக அவருக்கு சிலை அமைக்க சுப்புரு முடிவு செய்தார்.

இதை தனது சகோதரர் நாகராஜனிடம் தெரிவிக்க, இருவரும் சேர்ந்து வேலாயுதம் திரைப்படத்தில் அமைந்துள்ள விஜயின் தோற்றமுள்ள சிலையொன்றை வடிவமைத்தனர்.

அந்த சிலையை படம்பிடித்து முகப்புத்தகத்திலும் தரவேற்றம் செய்தனர். அதனை பார்த்த நடிகர் விஜய், மறுநாள் சுப்புருவை அலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.

அண்மையில், மதுரை சென்ற நடிகர் விஜயின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், சுப்புருவின் வீட்டுக்குச் சென்று விஜய் சிலையை வடிவமைத்த சுப்புரு, நாகராஜனை பாராட்டியுள்ளார்.

சீமெந்தினால் செய்யப்பட்ட அந்த சிலையில் வர்ணம் பூசப்பட்டு தத்ரூபமாக நடிகர் விஜய் போல காட்சியளிக்கிறது. இந்த சிலையை சென்னைக்கு எடுத்து சென்று நடிகர் விஜயை நேரில் சந்தித்து வழங்கப்போவதாக சுப்புரு தெரிவித்துள்ளார்.

Related Posts