யாழ்.மாவட்டத்திலுள்ள அரிசி ஆலைகளில் இருக்கும் இருப்புக்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் திரட்டப்படவுள்ளது என யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இணைப்பாளர் வசந்தசேகரன் தெரிவித்தார்.
மேலும் இந்த இருப்புக்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தம்மிடம் கையளிக்காத சந்தர்ப்பத்தில் அரிசி ஆலையிலுள்ள இருப்புக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும்.
எனவே அரிசி ஆலை உரிமையாளர்கள் இதனைக் கவனத்திற் கொண்டு இந்த இருப்புக்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக தம்மிடம் கையளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.