புதிய ஆணையாளர் பக்கச்சார்பற்ற விதத்தில் நடந்துகொள்வாராம்! – ஹெகலிய

ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்ட கரிசனைகளை புதிய ஆணையாளர் சையத் அல் ஹுசைன் கருத்திலெடுத்து பக்கச்சார்பற்ற விதத்தில் செயற்படுவார் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Keheliya-Rambukwella

இவ்வாறு தெரிவித்துள்ளார் அரச ஊடகப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ந்துள்ள மாற்றத்தை அரசாங்கம் சாதகமான விதத்தில் அணுகுவதாகவும் அரசாங்கம் ஒருபோதும் எதிர்மறையாகச் செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் எப்போதும் நவநீதம்பிள்ளையின் நடவடிக்கைகளை எதிர்த்தது அவரது கருத்துக்களை நிராகரித்தது. இலங்கை குறித்த அவரது சில நடவடிக்கைகள் நேர்மையற்றவை. புதிய மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் செயற்பாடுகளை கருத்தில் எடுத்து நேர்மையான விதத்தில் செயற்படுவார் என கருதுகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts