மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி இருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிபிலை – மடுல்லயில் இடம்பெற்ற பொது வர்த்தக நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த வருடத்திற்குள் நாட்டில் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் என்ற இலக்கை வெற்றிகொண்டு அடுத்து அனைவருக்கும் சுத்தமான குடிநீர் என்ற இலக்கையும் வெற்றிகொள்வோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.