இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை நிலையத்தின் வடபிராந்திய அலுவலகத்தில் 929 முறைப்பாடுகள் கடந்த ஏழு மாதங்களில் கிடைத்துள்ளதாக வடபிராந்திய இணைப்பாளர் ரவீந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.
நில அபகரிப்பு, இந்திய வீடமைப்புத் திட்டத்தில் முறைகேடுகள், அரச நிறுவனங்களில் ஊழல் மோசடி, நிதிப் பிரச்சினைகள் தொடர்பாக வடபகுதி மக்களினால் குற்றச்சாட்டுகள் அதிகமாக முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரச நிறுவனங்களில் அமைச்சர்களின் செல்வாக்குகளுடன் வேலை வாய்ப்புகள் மற்றும் சலுகைகள் சிலருக்கு வழங்கப்படுவதாகவும் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப மக்களுக்கு சலுகைள் வழங்கப்படுவதனால் ஏனைய மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த தை மாதத்தில் இருந்து யூலை மாதம் வரை பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் அதிகாமானவை நில அபகரிப்புத் தொடர்பான முறைப்பாடுகள் என்றும் படையினருக்கு எதிரான அந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் வடபிராந்திய இணைப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.