மனைப்பொருளியல், அழகுக்கலை பயிற்சியை ஆரம்பிக்க நடவடிக்கை

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன் உடுவில் பிரதேச செயலகத்தால், அழகுக்கலையும் மனைப் பொருளியலுக்குமான பயிற்சிநெறி எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பிரதேச செயலக கிராம அபிவிருத்தி அலுவலர் க.சாந்தநாயகம் இன்று தெரிவித்தார்.

3 மாத காலத்தைக்கொண்ட இந்தப் பயிற்சி நெறியில் 9 ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்றவர்கள் கலந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

பயிற்சி நெறி இணுவில் மகளிர் அபிவிருத்தி நிலைய கட்டிடத்தில் இடம்பெறும் என்பதுடன், இந்தப் பயிற்சி நெறியில் கலந்துகொள்பவர்களுக்கு தினமும் 100 ரூபாய் கொடுப்பணவு வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் பயிற்சி நெறியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், உடுவில் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி அலுவலர் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts