Ad Widget

இரண்டு உயிர்களை காவுகொண்ட ஐஸ் பக்கட் சவால்

தற்போது உலகலாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற விடையம் ஐஸ் பக்கட் சவால், இதனை பலர் வினோதமாக எடுத்துக்கொண்டாலும் சில சமயங்களில் அது ஆபத்தில் வந்து முடிகின்றது. அவ்வாறான சம்பவங்கள் அமெரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளன.

ice-backet-chalange

அமெரிக்காவை சேர்ந்த நென்சி ஒலே என்ற 17 வயது யுவதி ஒருவர் தனது தங்கையுடன் ஐஸ்பக்கட் சவாலை ஏற்பதற்கு ஆயத்தமாகி இருந்ததுடன்,ஷாவ்ன் ஒலே என்ற இவர்களின் சகோதரர் ஒருவர் இவர்களுக்கு ஐஸ் தண்ணீரை ஊற்றுவதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஷாவ்ன் ஒலே இவர்களுக்கு ஊற்றுவதற்காக பெரிய பாத்திரத்தில் ஐஸ் தண்ணீரை வைத்திருந்த போது அவரின் கை தவரி குறித்த யுவதியின் தலையில் பாத்திரம் விழுந்துள்ளது.

இதன் பின்பு யுவதியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு ஸ்கொட்லான்தை சேர்ந்த 18 வயதுடைய கெமெரொன் லங்கங்ஸ்டன் என்ற இளைஞர் ஒருவரும் ஐஸ் பக்கட் சவாலை ஏற்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .

Related Posts